இன்று அஸர் தொழுகையின் பிற்பாடு மர்கஸ் பள்ளியில் நடைபெற்ற முக்கியமான Praja Police திடீர் கூட்டம்

இன்று அஸர் தொழுகையின் பிற்பாடு மர்கஸ் பள்ளியில் நடைபெற்ற முக்கியமான Praja Police திடீர் கூட்டம்

இன்று அஸர் தொழுகையின் பிற்பாடு மர்கஸ் பள்ளியில் நடைபெற்ற முக்கியமான Praja Police திடீர் கூட்டம்

இக்கூட்டத்தில் மர்கஸ் பள்ளி நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புடன் எங்களுடன் கைகோர்த்தது.

அதேபோல் H Q I அவர்களும், Polonnaruwa காவல் துறையினரும் கலந்து கொண்டு தங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர்.

📌 இந்த கூட்டத்தில் முக்கியமாக,

• சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் பழக்கங்களை எவ்வாறு ஒழிப்பது

• ஊருக்குள் பெருகி வரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது

• இளைஞர்களை தவறான பாதையிலிருந்து காக்கும் வழிமுறைகள்

என்பன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது

மேலும், இரவு 10 மணிக்கு பிற்பாடு,

Praja Police, காவல் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஊரை சுற்றி கண்காணிப்பு மேற்கொள்வது,

சந்தேகத்திற்குரிய நடமாடல்கள் மற்றும் தேவையில்லாமல் திரிபவர்களிடம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல்,

வெளி ஊரிலிருந்து வருபவர்களுக்கு வீடுகள் வாடகைக்கு வழங்கும் போது,

பள்ளி நிர்வாகம் அல்லது Praja Police தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்து,

அவர்களின் அனுமதியுடன் மட்டுமே வாடகை வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இன்ஷா அல்லாஹ்,

இந்த முயற்சிகளின் மூலம் நம் ஊரில் ஒரு நல்ல மாற்றத்தையும்,

பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான சமூகத்தையும்

விரைவில் காண்போம் என்ற நம்பிக்கையுடன்…

சமூக நலனுக்காக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *