இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான்.

இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான்.

இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான்.

எங்கள் கிராமத்தில் கவனிப்பார் யாரும் இன்றி பாதையில் சுற்றித்திரிந்த ஓர் ஏழைச் சிறுவன். அவனை அவனின் சக வயது சிறுவர்கள் நகைத்து நையாண்டி செய்கின்றனர்.

அவனுக்கு உண்ண உணவில்லை. சரியாக உடுத்த உடுதுணிமணி இல்லை. பாடசாலைக்கு அனுப்பி அவனை கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்த ஆளில்லை. கைவிடப்பட்ட இதே நிலையில் இவன் வளர்ந்து பெரியவனானால் பெரும் விபரீதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பத்துப்பேர் நினைத்தால் தனி ஒருவனை அறிவாளியாக மாற்றவும் முடியும் பைத்தியகாரனாக்கவும் முடியும். இந்த சிறுவனை அவதானித்த ஒரு தம்பதியினர் சமீபத்தில் அரவணைத்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். இது பூரிப்புக் கொள்ளச்செய்யும் நட் செயலாகும்.

கேட்பார் பார்ப்பார் யாரும் இன்றி பாதையில் அலைந்த அந்த சிறுவனை ஒரு முறை மாத்திரம் அவதானித்த எனக்கு இன்று காலை மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. முற்றிலுமாக ஆளை அடையாளம் காணவே இயலவில்லை காலை நேர ஞாயிறு பிரத்தியேக வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறார்.

புதிய ஆடை, புத்தகப் பை, தலைக்கு எண்ணையிடப்பட்டு, அழகாக தலைமுடி வகுடு எடுக்கப்பட்டு அவனின் முகத்தில் பிரகாசமும் புன்னகையையும் தெரிந்தது. வயிறு காலியாக இருந்தவனுக்கு வயிறு நிறைய உணவும் ஆடையற்றவனுக்கு புதிய ஆடையும் அத்தோடு அவனின் எதிர்காலத்துக்கு கல்வியும் வழங்கப்படுகிறது. அதனை அவனின் முகபாவம் உணர்த்துகிறது.

குறித்த தப்பதியினரையும் அந்த குடும்பத்தாரையும் இறைவன் பொருந்திக்கொள்வானாக-!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *