இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா இன்று (2026/02/04)ம் திகதி புதன்கிழமை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பணிப்பாளர் “தேசாபிமானி” அஷ் ஷேக் AH.ஸஹான் (NAHJI,BA HONS,JP)அவர்களின் தலைமையில் பொலன்னறுவை மஜிட்புர அல் ஹுதா பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பொலன்னறுவை பிரதேச சபை உறுப்பினர் அஷ் ஷேக் AH.ரிஸ்கான்(ஸஹ்வி),பொ/அஸ் ஸபா மகா வித்தியாலய அதிபர் S.பசீல் ,மஜிட்புர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அஷ் ஷேக் MFM.இம்தியாஸ்(ஸஹ்வி) மற்றும் 188கல்லலை பிரஜா சக்தி தலைவர் SMM.ஷாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய சுதந்திர தின விழாவின் பின்னர் அல் ஹுதா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன .அதே போன்று Soorya Boys அணியினரால் பாலர் பாடசாலை வளாகத்தில் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டதோடு பாலர் பாடசாலைக்கு வர்ணம் Paint)பூசப்பட்டது .அதே போன்று விசேட அதிதிகளால் மரக்கன்றும் நடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *