சரிதம் பேசும் இளம் தலை முறையின் அடையாளம் அக்ரம்ஹாபிஸ் | சர்வதேசஅங்கீகாரம்

#சரிதம்_பேசும்_இளம்_தலைமுறையின்_அடையாளம்_அக்ரம்_ஹாபிஸ் | #சர்வதேச_அங்கீகாரம் | #வரலாற்றுச்_சுவட்டின்_மறுபக்கம் | #மனம்_திறக்கிறார்_அக்ரம் | #கத்தார்_ZABCO_நிறுவனம்

#International_Human_Rights_Organization எனக்கு வழங்கிய இந்தச் சான்றிதழ் என் வாழ்வின் ஒரு முக்கியமான அடையாளமாக நான் கருதுகிறேன். என் குழந்தைப் பருவம் தொடங்கி, கல்விப் பயணம் மற்றும் இன்று நான் அடைந்துள்ள இந்த நிலை வரை, ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வழிகாட்டியாகவும் உறுதியான ஆதரவாகவும் இருந்தவர்கள் என் #தந்தையும்_தாயும்.

பொலன்னறுவையிலிருந்து #திஹாரி மற்றும் #புத்தளம் (#மதவாக்குளம்) வரை, படிக்கச் சென்ற நாட்களிலெல்லாம் என்னுடன் என் தந்தை துணையாக வந்த அந்த நாட்கள், இன்று என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளன. அதிகாலையில் எங்கள் வீட்டில் இருந்து சுபஹ் தொழுதுவிட்டு, கால்நடையாக டவுன் வரை சென்று, அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து, நானும் என் தந்தையும் ஒன்றாகப் பயணித்த அந்தப் பாதைகள், என் வாழ்க்கையின் அடித்தளமாக அமைந்த ஒரு முக்கியமான பயிற்சிக் காலமாகும்.

பாடசாலை நாட்களில், ஒவ்வொரு மாதமும் எனக்கு கடிதங்களை அனுப்பி, அந்தக் கடிதங்களின் மூலம் சக மாணவர்களுடன் ஒற்றுமையாக பழகவும், ஆசான்களுக்கு உரிய கண்ணியத்தை வழங்கி, கற்பிக்கப்படும் பாடங்களை முழுமையாக விளங்கி படிக்கவும் “மகனே” என்று அன்புடன் அறிவுறுத்தியவர் என் தந்தை. #மர்ஹூம்_YLS_மௌலவி (#பெரிய_மவ்லவி) எனது அப்பா, தனது ஆணித்தரமான உபதேசங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் அந்தக் கடிதங்களின் வரிகளில் புதைத்து, எனக்கு அனுப்புவார். அந்த வார்த்தைகள், என் கல்விப் பயணத்தில் மட்டுமல்ல,என் வாழ்க்கைப் பயணத்திலும் என்னை வழிநடத்தும் நிலையான மதிப்புகளாக இன்று வரை விளங்குகின்றன.

அதனாலேயே இந்த உயரிய அங்கீகாரத்தை என்னுடைய இடத்தில் நின்று என் தந்தை பெற்றுக் கொண்ட தருணம் இந்தச் சாதனையை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியது. அது என் தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்ல என் வளர்ச்சிக்குப் பின்னணியாக இருந்த தந்தையின் தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த ஒரு மரியாதையாகவே நான் இதைக் காண்கிறேன்.

இந்தச் சான்றிதழ் என் கடந்த கால உழைப்புகளுக்கும் எதிர்கால பொறுப்புகளுக்கும் ஒரு உறுதியான ஊக்கமாக விளங்குகிறது.

#வானம்_நமக்கும்_தொட்டு_விடும்_தூரம்_தான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *