சமூக ஊடகங்களில் காசு பார்க்கலாம் என்ற நிலை உருவான பிறகு, படித்து பட்டம் பெற்று அதனால் ஒரு தொழிலையோ தொழில் முயற்சியையோ பெறலாம் என்ற எண்ணங்களை எல்லாம் கைவிட்டு ஒரு கூட்டம் ஸ்மார்ட் போனுடன் அலைய தொடங்கி விட்டது.
இந்த content creator என்கிற வகையறாவில் நல்ல விடயங்களை பதிவேற்றி பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
அதனால் அவர்கள் பொருளாதார ரீதியில் பயன்பெற்றது மாத்திரமல்ல மக்களும் பயனடைகிறார்கள்.
ஆனால் content என்ற பெயரில் கண்ட கன்றாவிகளையெல்லாம் பதிவேற்றி காசு பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இந்த பின்புலத்தில் அண்மைக்காலமாக பொது “போக்குவரத்தில் ஆண்கள் பெண்களை உரசுகிறர்கள்” என்கிற content வைரலாகி வருகிறது.
பொதுப்போக்குவரத்தில் பெண்களை உரசும் ஜெக்கோக்கள் இன்று நேற்றல்ல பொதுப்போக்குவரத்து உருவான காலமிருந்தே இருக்கிறார்கள்.
ஆனால் இந்த content creators காட்டும் உரசல் காணொளிகள் பலதில் அவை ‘செயற்கைத்தனமாக’ உருவகிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
பக்கத்து ஆசனத்தில் சாதாரணமாக அமர்ந்த பல ஆண்கள் என்ன நடக்கிறது? ஏன் இவள் வீடியோ எடுக்கிறாள் என பேந்தப்பேந்த முழிக்கும் காணொளிகளும் வருகின்றன.
காலம் செல்ல செல்ல content வறுமையில் வெறும் காசு தேடும் வெறியில் எதையும் செய்யலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.
நேற்று கேரளத்தில் பேருந்தொன்றில் இயல்பான நெரிசலில் இருந்த ஒரு மனிதனை உரசுகிறான் என சமூக ஊடகத்தில் வைரலாக்கியதில் நேர்ந்த அவமானத்தில் அந்த ஆண் தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்திகள் பரவுகின்றன.
அந்த காணொளியை பார்க்கும் சாதாரணமான எவருக்கும், இறந்து போன மனிதன் ஒரு content இற்காக பலியாக்கப்பட்டிருக்கிறான் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள இயலும்.
உரசல் Content போட்டு பிரபலமாக நினைத்தவருக்கும், இது போன்ற செயற்கைத்தனங்களை செய்ய முனையும் அனைவருக்கும் back fire ஆகி இருக்கும் ஒரு துயரச்சம்பவம் இது.

