பாதுகாப்புத் துறையில் பங்காற்றியவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி – அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் JLM. ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் தலைவர் பேராசிரியர், கலாநிதி SMM. நபீஸ் LL.B (Col), LL.M (Malaysia), Ph.D in Law (Malaysia), Attorney at Law கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரத் துறை பேராசிரியர், கலாநிதி AAM. நுபைல், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் MA. நவாஸ், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் AM. ஜௌபர், முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜூனைட் நபீர், சட்டத்தரணி முஹைதீன் சாலி, விஷேட அதிதிகளாக காத்தான்குடி வர்தக சங்க செயலாளரும் முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் .பி.எம்.எம். இர்ஷாத் ஹாஜியார் , ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளரும் நகர சபை உறுப்பினர் அஜ்வத் ஹாஜியார், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அப்துல் மஜீத் பர்சாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசத்தின் பாதுகாப்புக்கும் சமூக நலனுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அக்கரைப்பற்றுயைச் சேர்ந்த ஒய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எ.எம்.நவாஸ் தேசத்தின் காவலர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
